விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

1 mins read
ee2aaca7-bce3-49d9-b4d3-52446b88c1f4
-

வாழ்வா சாவா தருணத்தில் வாகை சூடிய ஆஸ்திரேலியா

டோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 2022ன் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது ஆஸ்திரேலியா.

கத்தாரின் டோஹா நகரில் பெரு நாட்டுடன் ஆஸ்திரேலியா பொருதிய ஆட்டம் தொடங்கி 120 நிமிடங்கள் ஆன நிலையில் இரு அணிகளும் தரப்புக்கு நான்கு கோல்கள் புகுத்தியிருந்தாலும் அதன்பிறகு கோல் ஏதும் புகுத்தாமல் இழுபறி நீடித்தது.

பெரு நாட்டு ஆட்டக்காரர் அலெக்ஸ் வெலேரா ஆறாவது பெனால்ட்டி வாய்ப்பைத் தவறவிட்டதால் 5-4 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது ஆஸ்திரேலியா.

இதனையடுத்து உலகத் தரவரிசையில் 42ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 'டி' பிரிவின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான பிரான்சைச் சந்திக்கும். இந்த ஆட்டம் வரும் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும்.

'யுயேஃபா நேஷன்ஸ் லீக்': கைநழுவியது பிரான்சின் கனவு

பாரிஸ்: பாரிஸில் நடந்த 'நேஷன்ஸ் லீக்' போட்டிக்கான ஆட்டத்தில் குரோவேஷியாவிடம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது பிரான்ஸ்.

இதையடுத்து முதலாவது பிரிவில் இரண்டு புள்ளிகளுடன் பட்டியலில் ஆகக் கடைசியில் உள்ள பிரான்ஸ் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியது. குரோவேஷியா ஏழு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் டென்மார்க் 2-0 எனும் கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரியாவை வென்றதையடுத்து ஒன்பது புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆஸ்திரியா நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.