'கணவரை கொல்வது எப்படி' கட்டுரையாளருக்கு ஆயுள்தண்டனை

'கணவரை கொல்வது எப்படி' கட்டுரையாளருக்கு ஆயுள்தண்டனை

1 mins read
9609c90c-8ec9-4a09-ab1b-bdbb82bed180
-

லாஸ் ஏஞ்­ச­லிஸ்: கண­வ­ரைக் கொல்­வது எப்­படி எனும் தலைப்­பில் கட்­டுரை எழு­திய அமெ­ரிக்­கப் பெண் எழுத்­தா­ள­ருக்கு ஆயுள்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

71 வயது நான்சி கிரேம்ப்­டன் புரோஃபி அவ­ரது கண­வ­ரைச் சுட்­டுக்­கொன்­ற­தா­கத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. 25 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகே அவர் பிணை­யில் செல்ல விண்­ணப்­பிக்­க­லாம்.

சமை­யற்­கலை வல்­லு­ந­ரான கண­வர் டேனி­யல் புரோஃபி அவர் வேலை­பார்த்த சமை­யற்­க­லைக் கல்­லூரி வகுப்­ப­றை­யில் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலை­யுண்டு காணப்­பட்­டார். மனைவி நான்சி அந்த நேரத்­தில் அந்த வட்­டா­ரத்­தில் காரை ஓட்­டிச்­சென்­றது கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வா­கி­யி­ருக்­கிறது. இருப்­பி­னும் அவர் கண­வ­ரைக் கொலை செய்­யப் பயன்­ப­டுத்­திய துப்­பாக்­கி­யைக் காண­வில்லை.

கண­வ­ரது ஆயுள் காப்­பீட்­டுத் தொகை­யா­கப் பல்­லா­யி­ரம் டால­ரைப் பெறும் நோக்­கில் நான்சி இந்­தக் கொலை­யைச் செய்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. கண­வனை எப்­ப­டிக் கொல்­ல­லாம், அதற்­கான கார­ணங்­கள் என்­னென்ன என்று கூறும் அவ­ரது வலைப்­ப­திவு இணை­யத்­தில் இன்­னும் உள்­ளது.