பாலினப் பாகுபாடு புகார் தொடர்பில் கூகல் $118 மி. இழப்பீடு

பாலினப் பாகுபாடு புகார் தொடர்பில் கூகல் $118 மி. இழப்பீடு

1 mins read
921b0606-2851-4a9e-a31c-410bf4bcce30
-

கலி­ஃபோர்­னியா: கூகல் நிறு­வ­னம் பெண் ஊழி­யர்­க­ளுக்­குக் குறைந்த ஊதி­யம் வழங்­கி­ய­தாக எழுந்த புகா­ரின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளுக்கு 118 மில்­லி­யன் டாலர் இழப்­பீடு வழங்க முன்­வந்­துள்­ளது.

2013 செப்­டம்­பர் முதல் கலி­ஃபோர்­னி­யா­வில் உள்ள கூகல் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றிய 15, 500 பெண் ஊழி­யர்­க­ளுக்கு இந்த இழப்­பீட்­டுத் தொகை வழங்­கப்­படும்.

ஒரே வித­மான பத­வி­களில் ஆண்­க­ளை­வி­டப் பெண்­க­ளுக்­குக் குறை­வான ஊதி­யம் வழங்­கி­ய­தா­க­வும் தகுதி குறை­வான பணி­களே பெண்­க­ளுக்கு வழங்­கப்­பட்­ட­தா­க­வும் 2017ஆம் ஆண்டு கூகல் நிறு­வ­னத்­தின் முன்­னாள் பெண் பணி­யா­ளர்­கள் மூவர் வழக்கு தொடுத்­த­னர். கலி­ஃபோர்­னி­யா­வின் சம ஊதி­யச் சட்­டத்தை கூகல் நிறு­வ­னம் மீறி­ய­தாக அவர்­கள் குற்­றம்­சாட்­டி­னர்.

இம்­மா­தம் 21ஆம் தேதி நடை­பெ­றும் விசா­ர­ணை­யில், கூகல் இவ்­வாறு இழப்­பீடு வழங்­கு­வ­தற்கு நீதி­பதி ஒப்­பு­தல் அளிக்­க­வேண்­டி­யது அவ­சி­யம். சென்ற ஆண்டு பெண் பொறி­யா­ளர்­க­ளுக்­குக் குறை­வான ஊதி­யம், ஆசிய வேலை விண்­ணப்­ப­தா­ரர்­க­ளைச் சரி­யாக நடத்­த­வில்லை எனும் புகார்­களில் ஒன்­றைத் தீர்ப்­ப­தற்கு $2.5 மில்­லி­யன் செலுத்­தி­யது கூகல்.