பிரபல கொரிய தொலைக்காட்சி தொடரான 'ஸ்குவிட் கேமை' மையப்படுத்தி ஒரு புதிய போட்டி நிகழ்ச்சியை கூடியவிரைவில் எதிர்பார்க்கலாம்.'ஸ்குவிட் கேமை' ஒளிபரப்பிய நெட்ஃபிலிக்ஸ் தளம் இதை அறிவித்துள்ளது.
வெற்றியாளருக்கு பரிசாக $6.35 மில்லியன் ரொக்கம் காத்துக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி வரலாற்றில் இதுவே ஆகப் பெரிய பரிசுத் தொகை எனக் கூறப்பட்டது.
'ஸ்குவிட் கேம்: தி சாலஞ்ச்' எனும் இந்தப் போட்டியில் தொலைக்காட்சி தொடரில் இடம்பெற்ற விளையாட்டுகள் இடம்பெறும். மொத்தம் 456 போட்டியாளர்கள் இதில் பங்கெடுக்கவுள்ளனர். பிரிட்டனில் படப்பிடிப்பு நடைபெறும்.
ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது பருவத்தை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என நெட்ஃபிலிக்ஸ் அண்மையில் தெரிவித்தது.
நெட்ஃபிலிக்ஸ் தளத்தின் ஆகப் பிரபல நிகழ்ச்சியாக ஸ்குவிட் கேம் இடம்பெற்றுள்ளது.
இந்த விளையாட்டில் போட்டியாளர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என நம்பலாம்.

