ஜகார்த்தா: அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான ஸுல்கிஃப்லி ஹசானை வர்த்தக அமைச்சராகவும் ஆயுதப் படை முன்னாள் தளபதியான ஹாடி ஜஜாந்தோவை வேளாண் துறை அமைச்சராகவும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ நியமித்துள்ளார்.
திரு ஸுல்கிஃப்லி, 59, அண்மையில்தான் ஆளும் கூட்டணியில் சேர்ந்தார். நாடாளுமன்றத் துணை நாயகராக இவர் உள்ளார்.
2009 முதல் 2014 வரை முன்னாள் அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோவின்கீழ் வனத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்தார்.
அதிபர் விடோடோ, தற்போதைய வர்த்தக அமைச்சர் முகம்மது லுஃப்தியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியுடன் இருந்தார். உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பை திரு லுஃப்தியால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையே, திரு சுஃப்யான் ஜலீலிடம் இருந்து வேளாண் துறை அமைச்சர் பொறுப்பை திரு ஹாடி, 58, ஏற்றுக்கொள்கிறார். பல்வேறு விவகாரங்களில் அரசாங்கத்துக்கு இவர் தொடர்ந்து அறிவுரை வழங்கி வந்துள்ளார்.
அதிபர் விடோடோ, மூன்று பேரைத் துணை அமைச்சர்களாகவும் நியமனம் செய்துள்ளார்.
புதிய நியமனங்கள் அனைத்தும் உடனடியாக நடப்புக்கு வருகின்றன.

