தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு; இரு காவலர்கள், சந்தேக ஆடவர் மரணம்

1 mins read
c4da77d8-4dfa-4340-8450-116581229ee9
-

லாஸ் ஏஞ்­ச­லிஸ்: அமெ­ரிக்­கா­வின் கலி­ஃபோர்­னியா மாநி­லம், எல் மாண்டே நக­ரில் நேற்று முன்­தி­னம் நடந்த துப்­பாக்­கிச்­சூட்­டில் இரு காவல் அதி­கா­ரி­களும் சந்­தேக ஆட­வர் ஒரு­வ­ரும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர்.

கத்­திக்­குத்­துச் சம்­ப­வம் ஒன்­றின் தொடர்­பில் அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­திக்­கொண்­டி­ருந்­த­போது அவர்­கள் சுடப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பணி­யின்­போது சுடப்­பட்ட அந்த அதி­கா­ரி­கள் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். ஆனால் அவர்­கள் சிகிச்சை பல­னின்றி உயிர் இழந்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அவர்­க­ளின் பெயர்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அவர்­களில் ஒரு­வர், எல் மாண்டே காவல்­து­றை­யைச் சேர்ந்­த­வர் என்­றும் மற்­றொ­ரு­வர் காவல்­து­றை­யில் சேர்ந்து கிட்­டத்­தட்ட ஓராண்டு ஆகப்­போ­கிறது என்­றும் உள்­ளூர் ஊட­கம் ஒன்று செய்தி வெளி­யிட்­டது.

அடை­யா­ளம் கண்­ட­றி­யப்­ப­டாத ஆட­வர் ஒரு­வர், இந்­தத் துப்­பாக்­கிச்­சூட்­டில் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக லாஸ் ஏஞ்­ச­லிஸ் காவல்­துறை தெரி­வித்­தது.

அமெ­ரிக்­கா­வில் துப்­பாக்கி வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் அண்­மை­யில் மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளன.

டெக்­சஸ் மாநி­லத்­தின் உவால்ட நக­ரில் உள்ள தொடக்­கப்­பள்ளி ஒன்­றில் கடந்த மாதம் அரங்­கே­றிய துப்­பாக்­கிச்­சூட்­டில் 19 மாண­வர்­களும் இரு ஆசி­ரி­யர்­களும் கொல்­லப்­பட்­ட­னர்.

நியூ­யார்க் மாநி­லத்­தின் பஃப்ளோ­ நகரில் உள்ள பேரங்­காடி ஒன்­றில் நடந்த மற்­றொரு துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

அதைத் தொடர்ந்து, அமெ­ரிக்­கா­வில் துப்­பாக்­கிக் கலா­சா­ரத்தை முடக்­கும் வித­மாக கடு­மை­யான சட்­டங்­க­ளைக் கொண்­டு­வர தொடர்ந்து முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.