பாலியல் வன்கொடுமை: இந்திய வம்சாவளி மருத்துவருக்கு பிரிட்டனில் 4 ஆண்டு சிறைத் தண்டனை

பாலியல் வன்கொடுமை: இந்திய வம்சாவளி மருத்துவருக்கு பிரிட்டனில் 4 ஆண்டு சிறைத் தண்டனை

1 mins read
92839bb8-20ac-4f0c-b981-38cc6b03d869
-

லண்­டன்: பாலி­யல் வன்­கொ­டு­மைக் குற்­றச்­சாட்டு வழக்­கில் இந்­திய வம்­சா­வளி மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு லண்­டன் நீதி­மன்­றம், புதன்­கி­ழ­மை­யன்று நான்கு ஆண்­டுச் சிறைத் தண்­டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது. மனேஷ் கில் என்ற 39 வயது ஆட­வர், ஆண்-பெண் தோழமை உறவு தேடும் இணை­யத் தளம் வாயி­லாக நட்­பு­கொண்ட பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த வழக்கை ஸ்காட்­லாந்து நீதி­மன்­றம் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக விசா­ரித்து கடை­சி­யில் ஒரு பெண்­ணுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட கடு­மை­யான பாலி­யல் வன்­கொ­டுமை குற்­றத்தை மனேஷ் புரிந்­துள்­ள­தா­கத் தீர்ப்­ப­ளித்­தது.

அதன் அடிப்­ப­டை­யில் அவ­ருக்கு நான்கு ஆண்­டுச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மனேஷ், பிரிட்­ட­னில் மருத்­து­வ­ரா­கப் பணி­பு­ரிந்து வந்­தார். ஆண், பெண் உற­வு­தே­டும் இணை­யத்­த­ளம் ஒன்­றில், 'மைக்' என்ற பெய­ரில் வலம் வந்­தார். அப்­போது நட்­பான ஒரு பெண்ணை ஸ்டெர்­லிங் நக­ரில் உள்ள ஒரு விடு­தி­யில் சந்­தித்­தார். அங்கு, அந்­தப் பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

இந்­தச் சம்­ப­வம் 2018ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் நடந்­த­தாக பிடிஐ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. பாலி­யல் குற்­றத்­திற்­காக ஒரு­வ­ருக்கு விதிக்­கப்­பட்­டுள்ள இந்­தத் தண்­டனை, இது­போன்ற குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு ஓர் எச்­ச­ரிக்­கை­யாக அமை­யும் என்று காவல்­துறை அதி­காரி வில்­சன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார். அதே நேரத்­தில் பாதிக்­கப்­பட்ட அந்­தப் பெண், தனக்கு நடந்த கொடு­மையைத் துணிச்­ச­லு­டன் வந்து காவல்­து­றை­யி­டம் பகிர்ந்­து­கொண்­டது பாராட்­டத்­தக்­கது என்­றார் அந்த அதி­காரி.