உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு கோஸ்டா ரிக்கா தகுதி

உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு கோஸ்டா ரிக்கா தகுதி

1 mins read
602b278a-5b00-4f2f-86e8-99cbf0075ff6
-

டோஹா: கத்­தா­ரில் நடை­பெ­ற­விருக்­கும் உல­கக் கிண்ண காற்­பந்து இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெறும் கடைசிக் குழு­வாக அதா­வது 32வது குழு­வாக கோஸ்டா ரிக்கா திகழ்­கிறது. டோஹா­வில் செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற கடைசி தகுதி ஆட்­டத்­தில் கோஸ்டா ரிக்கா 1-0 என்ற கோல் கணக்­கில் நியூ­சி­லாந்துக் குழு­வைத் தோற்­க­டித்­தது. உல­கக் கிண்ண இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெற்ற மகிழ்ச்­சி­யில் கோஸ்டா ரிக்கா குதூ­க­லிக்க, நியூ­சி­லாந்­துக் குழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் டேனி ஹே, "இந்த ஆட்­டத்­தில் எங்­க­ளது வெற்றி ஆட்­டத்­தின் நடு­வ­ரா­லும் வீடியோ நடு­வர் முறை­யா­லும் பறிக்­கப்­பட்­டது," என்று மிகுந்த கோபத்­து­டன் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார். நியூ­சி­லாந்து போட்ட சம­நிலை கோல் நிரா­கரிக்­கப்­பட்­ட­து­டன் அக்­கு­ழு­வின் ஆட்­டக்­கா­ர­ரான கோஸ்டா பார்­ப­ரோ­சஸ் ஆட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார். ஆக, உல­கக் கிண்ண இறு­திச் சுற்­றில் பங்­கேற்­கும் 32 குழுக்­கள் யாவை என்­பது முடி­வாகி­விட்­டது.