'ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் பிடிபட்டார்'

'ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் மூத்த உறுப்பினர் பிடிபட்டார்'

1 mins read
ef6f52a0-655c-4bfb-b513-9d4c63d18140
-

பாரிஸ்: ஐஎஸ் தீவி­ர­வாதக் குழு­வின் தொடர்­பு­டைய சஹேல் குழு­வின் மூத்த உறுப்­பி­னர் ஒரு­வரை பிரான்ஸ் படை­யி­னர் மாலி­யில் கைது­செய்­துள்­ள­தாக பிரான்ஸ் ராணு­வம் நேற்று தெரி­வித்­தது. மாலி­யில் நீண்ட கால­மாக போரா­ளி­க­ளைத் துடைத்­தொ­ழிக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த பிரான்ஸ் ராணு­வம், அங்­கி­ருந்து தம் படை­களை முழு­மை­யாக மீட்­டுக்­கொள்­வ­தற்­குத் தயா­ராகி வரு­கிறது. இந்­நி­லை­யில் ஜூன் 11ஆம் தேதி இரவு ஐஎஸ் குழு­வைச் சேர்ந்த அவ்­மெயா அவல்ட் அல்­பா­கயெ என்ற மூத்த உறுப்­பி­னரை பிரான்ஸ் ராணு­வம் கைது செய்­த­தாக ஏஎ­ஃப்பி செய்தி­ நி­று­வ­னத்­தி­டம் ராணு­வப் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.