ரயில் கதவில் கால்சட்டை மாட்டிக்கொண்டதில் ஒருவர் மரணம்

ரயில் கதவில் கால்சட்டை மாட்டிக்கொண்டதில் ஒருவர் மரணம்

1 mins read
1d81dd9a-da7c-4a26-9b03-3afb6927a39b
நியூயார்க்கில் உள்ள பல ரயில் நிலையங்களை அன்றாடம் பல்லாயிரம் பேர் பயன்படுத்துகின்றனர் (படம்: ஏஃபி) -

ரயில் கதவில் கால்சட்டை மாட்டிக்கொண்டதால், பயணி ஒருவர் ரயில் தடத்தில் விழுந்து உயிரிழந்தார். ரயிலிலிருந்து வெளியேறும்போது, அவருடைய கால்சட்டை கதவில் மாட்டிக்கொண்டது. ரயில் நிற்காமல் சென்றதால், கால்சட்டையோடு அவர் பயணிகளின் நடைமேடை வழி இழுத்துச்செல்லப்பட்டார். பின்னர் ரயில் தடத்தில் விழுந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நள்ளிரவு சமயத்தில் நடந்தது.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மாண்டார்.

தடத்தில் விழுந்தபோது எதிர் வழியில் வந்த ரயில் அவரை மோதியதன் விளைவாக அவர் மாண்டதாகக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.