ஆசனவாயில் கம்பி செருகி ஊழியரைக் கொன்றவருக்கு சிறைத் தண்டனை

ஆசனவாயில் கம்பி செருகி ஊழியரைக் கொன்றவருக்கு சிறைத் தண்டனை

1 mins read
07ed4a91-3155-4b07-9225-1f60df122874
படம்: தென் கொரிய ஊடகம் -

தன்னுடைய ஊழியரின் ஆசனவாயில் கம்பி செருகி அவரைக் கொன்ற நபருக்கு தென் கொரியாவில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் சென்றாண்டு டிசம்பரில் நடந்தது.

கொலைக்கு முன், அவ்விரு ஆடவர்களும் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. 20 வயது மதிக்கத்தக்க தனது ஊழியரின் நடத்தை திடீரென 41 வயதான குற்றவாளிக்கு எரிச்சல் மூட்டியுள்ளது.

கோபத்தில், ஒரு 70 செண்டிமீட்டர் நீளமான கம்பியை ஊழியரின் ஆசனவாயில் செருகியுள்ளார்.

இதனால் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் வெடித்து ஆடவர் மாண்டதாக கொரிய காவல் துறையினர் தெரிவித்தனர்.

குற்றவாளியின் இந்தக் கொடூரச் செயலை மன்னிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.