அலுவலகங்கள், பள்ளிகளுக்கு நேற்று பொது விடுமுறை

அலுவலகங்கள், பள்ளிகளுக்கு நேற்று பொது விடுமுறை

2 mins read
d3859760-9c27-4746-9d9e-fe31c3346b57
பெட்ரோல் வாங்க தலைநகர் கொழும்பில் வாகன ஓட்டுநர்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இலங்கையில் எரிபொருள் தீர்ந்ததால் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி

கொழும்பு: இலங்­கை­யில் எரி­பொருள் தீர்ந்­து­வி­டும் நிலை ஏற்­பட்­டு உள்­ள­தால் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் முடங்­கி­யுள்­ளன.

ஏற்­கெ­னவே கட்­ட­ணப் பாக்கி இருப்­ப­தன் கார­ண­மாக எரி­பொருள் வரத்து தடை­பட்­டுள்­ள­தால் அரசாங்­கத்­துக்­குச் சொந்­த­மான சிலோன் பெட்­ரோ­லிய கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வனத்­துக்கு எரி­பொ­ருள் கிடைக்­க­வில்லை என மின்­சார, எரி­சக்­தித் துறை அமைச்­சர் காஞ்­சனா விஜேசே­கர நேற்று முன்­தினம் கூறி­ இருந்­தார்.

இதைத் தொடர்ந்து, வீதி­களில் வாக­னப் போக்­கு­வ­ரத்­தைக் கட்டுப்­படுத்­தும் வகை­யில், அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்­கும் பள்­ளி­க­ளுக்­கும் நேற்று பொது விடு­முறை அளிக்­கப்­பட்­டது. இத­னால் தலை­ந­கர் கொழும்­பி­லும் அதைச் சுற்­றி­யுள்ள சாலை­களும் வெறிச்­சோடி காணப்­பட்­டன.

இதற்­கி­டையே, பெட்­ரோல் நிலை­யங்­க­ளுக்கு எரி­பொ­ருள் வந்­து­சேர்­வதை எதிர்­பார்த்து அவற்­றுக்கு வெளியே பல கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு பல்­லா­யி­ரக்­க­ணக்­கான வாக­னங்­கள் வரிசை பிடித்து காத்­து இ­ருந்­தன.

எரி­பொ­ருள் விநி­யோ­கத்­திற்­காக ரஷ்யா, இந்­தியா உள்­ளிட்ட பல நாடு­க­ளி­டம் இலங்கை அரசு உதவி கோரி­யுள்­ளது. எரி­பொ­ருள் இறக்கு­ம­திக்­காக புதி­தாக $500 மில்­லி­யன் கட­னு­த­வி­யைப் பெற இந்­தி­யா­வின் ஒப்­பு­த­லுக்­காக இலங்கை காத்­தி­ருப்­ப­தாக திரு விஜே­சே­கர தெரி­வித்­தார்.

அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு தாக்­குப்­பி­டிக்க, அனைத்­து­லக பண நிதி­யத்­தி­டம் இருந்­தும் சீனா, இந்தியா உள்­ளிட்ட நாடு­க­ளி­டம் இருந்­தும் இலங்­கைக்கு ஏறத்­தாழ $6 பில்­லி­யன் நிதி­யு­தவி தேவைப்­படும் என பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்கே கூறி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், பட்­டி­னி­யால் வாடும் நிலைமை ஏற்­ப­டு­வது குறித்து இலங்கை மக்­கள் அஞ்சு­கின்­ற­னர். மாவு, பால் மாவு போன்ற உண­வுப் பொருள்­க­ளுக்­குத் தட்டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. பண­வீக்கம் ஏறக்­கு­றைய 60 விழுக்­காட்டை எட்­டி­யுள்­ளது. கடந்த அறு­வ­டைப் பரு­வத்­தில் அரிசி உற்­பத்தி 40 முதல் 50 விழுக்­காடு வரை சரிந்­தது. தற்­போது விதை, உரத்­திற்­கான தட்­டுப்­பாட்­டால் பயிர் உற்­பத்தி 50 விழுக்­காடு வரை குறை­ய­லாம் என வேளாண் துறை அமைச்­சர் மகிந்த அம­ர­வீர கூறி­னார்.