எல்லையில் முள்வேலிகளை அமைக்கும் மலேசியா

நாட்டிற்குள் எண்மர் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வுக்­குள் எட்­டுப் பேர் சட்­ட­வி­ரோ­த­மாக நுழை­வ­தைக் காட்­டும் காணொ­ளிக் காட்சி சிசி­டிவி கண்­கா­ணிப்­புக் கரு­வில் பதி­வா­ன­தைத் தொடர்ந்து, ஜோகூர் நீரி­ணை­யின் ஒரு பகு­தி­யில் மலே­சிய காவல்­துறை­யி­னர் முள்­வே­லி­களை அமைத்­துள்­ள­னர்.

மலே­சி­யா­வுக்­குள் சிலர் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்­தது குறித்து நேற்று அதி­காலை 1.12 மணிக்கு காவல்­து­றைக்­குத் தக­வல் கிடைத்­த­தாக ஜோகூர் பாரு தெற்கு காவல்­துறை தலை­வர் ராவுப் சலா­மாட் தெரி­வித்­தார்.

ஆட­வர்­கள் ஐவ­ரும் மாதர்­கள் மூவ­ரும் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைந்­த­தைக் கண்­கா­ணிப்­புக் கரு­வி­யில் பதி­வான காணொ­ளிப் பதிவு காட்­டி­ய­தாக அவர் சொன்­னார்.

நாட்­டின் எல்­லை­யைப் பாது­காப்­ப­தற்­கான ஆரம்­ப­கட்ட வழி­மு­றை­களில் முள்­வே­லி­களை அமைப்­ப­தும் அடங்­கும் என ஜோகூர் முதல்­வர் ஒன் ஹாஃபிஸ் கஸாலி தெரி­வித்­தார்.

சம்­பந்­தப்­பட்ட அந்­தப் பகு­தி­யில் எல்லா நேர­மும் காவல்­துறை அதி­கா­ரி­கள் சுற்­றுக்­கா­வல் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!