உக்ரேன் சென்று போலந்து திரும்பிய மூன்று நாட்டுத் தலைவர்கள்

உக்ரேன் சென்று போலந்து திரும்பிய மூன்று நாட்டுத் தலைவர்கள்

1 mins read
d69feefa-5067-4375-9b89-a3b67c7e0b97
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாட்டுத் தலைவர்கள் இருந்த ரயிலை இந்த ஓட்டுநர்தான் ஓட்டினார். படம்: இபிஏ -

ஷேம­ஷில், போலந்து: உக்­ரேன் மீது ரஷ்­யப் படை­யெ­டுப்பு தொடங்­கி­ய­தில் இருந்து உக்­ரே­னுக்கு முதன்­மு­றை­யாக சென்ற பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வேல் மெக்­ரோன், ஜெர்­மானி­யப் பிர­த­மர் ஓலஃப் ஷோல்ஸ், இத்­தா­லி­யப் பிர­த­மர் மாரியோ டிராகி ஆகி­யோர் நேற்று ரயி­லில் போலந்து திரும்­பி­னர்.

போலந்­தின் ஷேம­ஷில் நக­ருக்கு ரயில் வந்­து சேர்­வ­தற்கு ஒரு மணி நேரத்­திற்கு முன்­னர், பிரெஞ்சு அதி­பர் மெக்­ரோனை இத்­தா­லி­யப் பிர­த­மர் டிராகி சந்­தித்து இரு­நாட்டு உற­வு­கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

உக்­ரே­னி­யத் தலை­ந­கர் கியவ்­வில் இருந்து புறப்­பட்ட பிறகு அதி­பர் மெக்­ரோ­னும் ஜெர்­மா­னி­யப் பிர­த­மர் ஷோல்­சும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

உக்­ரே­னுக்­குச் சென்­றி­ருந்த அந்த மூன்று நாட்­டுத் தலை­வர்­களு­டன் ருமே­னிய அதி­பர் கிளவ்ஸ் யுஹ­னி­சும் சேர்ந்­து­கொண்­டார். ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் சேர உக்ரே­னுக்கு அதி­கா­ர­பூர்வ தகுதி நிலையை உட­ன­டி­யாக வழங்க தாங்­கள் தயா­ராக இருப்­ப­தாக அத்­த­லை­வர்­கள் கூறி­னர்.

அவர்­க­ளின் இந்த அறி­விப்பை வர­வேற்ற உக்­ரே­னிய அதி­பர் வொலோ­மி­டிர் ஸெலென்ஸ்கி, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் மற்ற உறுப்பு நாடு­களும் இதற்கு இணக்கம் தெரி­விக்­கும் எனத் தாம் நம்பு­வதா­கச் சொன்­னார். இந்த மாதம் 23, 24ஆம் தேதி­களில் ஐரோப்­பிய ஒன்­றிய உச்­ச­நிலை மாநாடு நடை­பெ­று­கிறது.