கிருமித் தொற்று காலக்கட்டத்தில் மனநல பாதிப்பு அதிகரித்தது

கிருமித் தொற்று காலக்கட்டத்தில் மனநல பாதிப்பு அதிகரித்தது

1 mins read
cf96cf03-5791-44df-93a1-afbad27dee79
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித் தொற்று பரவத்தொடங்கிய முதல் ஆண்டில் உலக மக்களிடையே மன அழுத்தமும், பதற்றமும் 25 விழுக்காடு அதிகரித்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக பெண்கள், இளம் வயதினர், ஏற்கெனவே மனநோய் உள்ளவர்கள் ஆகிய தரப்பினர் வெகுவாக பாதிக்கப்பட்டதாக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருமித் தொற்றால் சுகாதாரம், பொருளியல், சமூகங்கள் ஆகியவற்றில் நீண்டக்கால பாதிப்புகள் இருக்கும் என்றும், கொவிட்-19 பல தலைமுறைகள் கண்டிடாத ஆக மோசமான நெருக்கடி என்றும் அமைப்பு கூறியது. உலகில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேர் ஏதோ ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு வயதில் நடக்கும் பாலியல் கொடுமை, அதிகாரத்தைக் கொண்டு ஒருவரை கொடுமைப்படுத்துவது ஆகியவை மனநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலக நாடுகள் மனநல சுகாதாரத்தில் கவனம் செலுத்தவேண்டும் என அமைப்பு கேட்டுகொண்டது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உலக சுகாதார அமைப்பு அதன் அறிக்கையில் வலியுறுத்தியது.