வாகன மின்னூட்டத்தை தடுத்த கடைக்காரர் வன்மையாகத் தாக்கப்பட்டார்

வாகன மின்னூட்டத்தை தடுத்த கடைக்காரர் வன்மையாகத் தாக்கப்பட்டார்

1 mins read
1462b341-d43b-4212-8d2c-5082fecfb0d3
படம்: சீன இணையத் தளம் -

சீனாவில் ஒருவர் தன்னுடைய மின்சார வாகனத்திற்கு மின்னூட்ட ஒரு கடைக்கு வெளியே வாகனத்தை நிறுத்தியுள்ளார். கடைக்காரரின் அனுமதியைப் பெறாமல் வாகனத்துக்கு மின்னூட்ட தொடங்கினார். இதைத் தடுக்கவந்த கடைக்காரப் பெண்ணை வன்மையாக தாக்கியுள்ளார்.

பெண்ணைத் தரையில் தள்ளி, அவர் முகத்தில் குறைந்தது நான்கு முறை குத்தி உதைத்தார்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான இந்தக் காட்சி சீன இணையத்தளங்களில் பரவியது.

ஏற்கெனவே கடையில் இருந்த குளிர்சாதன பெட்டிக்கு மின்னூட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த விசையை அகற்றி வாகனத்தின் விசையை ஆடவர் பொருத்தியுள்ளார்.

இதைக் கண்ட கடைக்காரர் ஆடவரை கடையைவிட்டு வெளியேறும்படி கூறியிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் மூண்டு, ஆடவர் பெண்ணைத் தாக்கினார்

கடைக்காரருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டதாக அவருடைய கணவர் குறிப்பிட்டார்.

தாக்கியவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். விசாரணை நடந்துவருகிறது.