சீன வேதி ஆலை வெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு

சீன வேதி ஆலை வெடிப்பில் ஒருவர் உயிரிழப்பு

1 mins read
d70f2a10-6473-4a8a-8cc3-77640cc5d976
-

சீனாவின் ஷாங்காய் நகரை ஒட்டியுள்ள ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள ஒரு வேதி ஆலையில் நேற்று விடிகாலை வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அவ்வாலையின் மூன்று இடங்களில் தீப்பிடித்து எரிய, அப்பகுதி கரும்புகை சூழக் காட்சியளித்தது. இந்த வெடிப்பு, தீச்சம்பவத்தில் குறைந்தது ஒருவர் மாண்டுபோனதாகக் கூறப்பட்டது. வெடிப்பு நிகழ்ந்த ஆலைக்கு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஷாங்காய் தீயணைப்புத்துறை தெரிவித்தது. படம்: ஷாங்காய் டெய்லி