செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
17f0f45c-f915-4b49-8a55-cc28d092c1a6
-

மின்தூக்கியில் சிக்கிய கால்கள்

ஜார்ஜ்டவுன்: முதல் தளத்திற்கும் இரண்டாம் தளத்திற்கும் இடையே, மின்தூக்கியில் கால்கள் மாட்டிக்கொண்டதால் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக ஆடவர் வலியில் துன்பப்பட நேர்ந்தது. மலேசியாவின் பினாங்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பத்து நிமிடங்களில் அந்த 55 வயது ஆடவரைப் பத்திரமாக விடுவித்து, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வெள்ளச் சுற்றுலா: சர்ச்சைக் கருத்து

கோலாலம்பூர்: ஆண்டு தோறும் மலேசியாவில் ஏற்படும் வெள்ளம், சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் சாத்தியமிருப்பதாகக் கூறி, சர்ச்சையில் சிக்கியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் நஸ்ரி அஸிஸ். "வெள்ளம், திருவிழா போன்றது. ஒவ்வொரு பருவமழைக் காலத்தின் போதும், நாம் வெள்ளச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தால் மக்கள் வருவர்," என்று அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, சமூக ஊடகவாசிகள் அவரைத் தூற்றி வருகின்றனர்.

அமெரிக்கருக்கு ரஷ்யாவில் சிறை

மாஸ்கோ: கஞ்சா கடத்திய குற்றத்திற்காக அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரி ஒருவருக்கு ரஷ்ய நீதி மன்றம் 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. 60களில் இருக்கும் மார்க் ஃபோஜல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கஞ்சா வைத்திருந்ததற்காக மாஸ்கோ விமான நிலையத்தில் பிடிபட்டார். மாஸ்கோவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னாள் ஊழியரான அவர், பிடிபட்டபோது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.