இலங்கையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு

இலங்கையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு

1 mins read
425b0de4-490b-4e70-8aab-d1a35ca29b41
சம்பவம் நிகழ்ந்த பெட்ரோல் நிலையத்தில் இலங்கை ராணுவ அதிகாரி. படம்: ஏஎஃப்பி -

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் கலவரம் மூண்டதால் அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் நால்வரும் மூன்று ராணுவ வீரர்களும் காயமடைந்ததாக காவல்துறையினர் கூறினர்.

அச்சம்பவம் தலைநகர் கொழும்பிற்கு 365 கிலோமீட்டர் அப்பால் உள்ள விசுவமடு பகுதியில் நிகழ்ந்தது.

ராணுவ அதிகாரிகள் மீது 20லிருந்து 30 பேரைக் கொண்ட குழுவினர் கற்களை வீசி எறிந்ததாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் தீர்ந்துபோனதால் வாகனமோட்டிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கலவரம் மூண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு ஆக மோசமான பொருளியல் நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கி வருகிறது.