பச்சிளம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி; அமெரிக்காவில் அனுமதி

பச்சிளம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி; அமெரிக்காவில் அனுமதி

1 mins read
74878f1b-9996-45c3-a5a9-1116592ccb67
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏழு வயது சிறுவன். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

நியூயார்க்: அமெரிக்காவில் பச்சிளம் குழந்தைகளுக்கும் தவழும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை தடுப்பூசி போடாத எஞ்சிய வயதுப் பிரிவினருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

சனிக்கிழமையன்று (18 ஜூன்) அமெரிக்காவின் 'சிடிசி' எனப்படும் நோய்க்கட்டுப்பாடு, தடுப்பு ஆலோசனைக் குழுவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அனைவரும் கைக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசரின் மூன்று முறை போடக்கூடிய தடுப்பூசிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மொடர்னாவின் இரு முறை தடுப்பூசி போடவும் 12-0 என்று வாக்களிக்கப்பட்டது.