நியூயார்க்: அெமரிக்காவில் பச்சிளம் குழந்தைகளுக்கும் தவழும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை தடுப்பூசி போடாத எஞ்சிய வயதுப் பிரிவினருக்கும் தடுப்பூசி போடப்படு கிறது. சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் 'சிடிசி' எனப்படும் நோய்க்கட்டுப்பாடு, தடுப்பு ஆலோசனைக் குழுவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அனைவரும் கைக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசரின் மூன்று முறை போடக்கூடிய தடுப்பூசிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தை களுக்கு மொடர்னாவின் இரு முறை தடுப்பூசி போடவும் 12-0 என்று வாக்களிக்கப்பட்டது.
சிடிசியின் இயக்குநர் ரோச்செல் வாலென்ஸ்கி, பரிந்துரைகளில் கை ெயழுத்திட்டு கைக்குழந்தை களுக்குத் தடுப்பூசி போடும் முறை குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஆயிரக்கணக்கான குழந்தை களுக்கான மருந்தகங்களிலும் மருந்து விற்பனை நிலையங்களிலும் இவ்வார இறுதியில் இதர இடங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று 'சிடிசி' தெரிவித்தது.
"கிருமித்தொற்றுக்கு எதிராக போராடும் நாட்டுக்கு இது முக்கிய முன்னேற்றம்," என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
"இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப் பானவை, ஆற்றல் வாய்ந்தவை. ெகாவிட்-19 தொற்றிலிருந்து குழந் தைகளைப் பாதுகாப்பதால் பெற் றோரும் நிம்மதியோடு இருக்கலாம்," என்று அறிக்கை வாயிலாக அதிபர் பைடன் தெரிவித்தார்.
சிடிசியின் அங்கீகாரத்தை பெரும்பாலான பெற்றோர் வரவேற்று உள்ளனர். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தடுப்பூசி அறிமுகமானபோது தங்களுடைய குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் பாதுகாப்பு கிடைக்காதா என்று அவர்கள் ஏங்கினர்.
இருந்தாலும் சில பெற்றோர் இன்னமும் தயக்கம் காட்டுவதால் அல்லது ஊக்கமூட்ட வேண்டியிருப்பால் ஐந்து முதல் 11 வயது வரை குழந்தைகளில் 29 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று சிடிசி கூறியுள்ளது.
ஐந்து வயதுக்குக் கீழ் உள்ளவர் களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக ஏற்கெனவே ஃபைசர், மொடர்னா ஆகிய இரு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பத்து மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளைப் பெற்று அமெரிக்க அரசாங்கம் இருப்பில் வைத்து உள்ளது.

