ஹாங்காங்: சீனா, ஹாங்காங்கின் புதிய தலைவராக பொறுப்பு ஏற்கும் ஜான் லீ தலைமையிலான புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சீனாவிடம் ஹாங்காங்கை பிரிட் டன் ஒப்படைத்து 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் ஜூலை 1ஆம் தேதி புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கவிருக்கின்றனர். ஸின்ஹுவா செய்தி நிறுவனம் மற்றும் ஹாங்காங்கின் புதிய அர சாங்கம் புதிய நிர்வாகிகளின் பட்டி யலை நேற்று வெளியிட்டிருந்தன.
தற்போதைய நிதி அமைச்சரான பால் சான் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கிறார். தெரசா செங்குக்குப் பதிலாக பால் லாம் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய அமைச்சரவையின் 2வது முக்கிய பதவியான தலைமைச் செயலாளராக எரிக் சான் பொறுப்பு ஏற்கிறார்.
திரு ஜான் லீயின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சீன அதிபர் ஸி ஜின் பிங் கலந்துகொள்வார் என ஹாங் காங்கின் சில ஊடகங்கள் தெரி வித்து உள்ளன.
ஆனால் இதனை சீன அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்த வில்லை.
கடந்த மே 12ஆம் தேதி ஹாங் காங் நாணய ஆணையம், 2019க்குப் பிறகு முதல் முறையாக தலையிட்டு உள்ளூர் நாணயத்தின் மதிப்பை உயர்த்த முயற்சி மேற்கொண்டது.
டாலருக்கு எதிரான வர்த்தகத் தில் ஹாங்காங் டாலர் பலவீன மடைந்ததே இதற்கு காரணம்.
புதிய தலைவராகும் திரு லீ காவல்துறையின் முன்னாள் அதி காரி ஆவார். ஹாங்காங்கில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதிலும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதிலும் அவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். ஆனால் வர்த்தகத்தில் அவருக்கு பெரிய அனுபவம் இல்லை.
புதிய தலைவர் பொறுப்பு ஏற்பதையடுத்து தெளிவான புதிய நிதி, பொருளியல் கொள்கைகள் அறிவிக்கப்படலாம் என உலக முத லீட்டாளர்களும் உள்ளூர் வர்த்தக சமூகங்களும் காத்திருக்கின்றன.
முக்கியமாக கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகளை புதிய தலைவர் தளர்த்துவார் என பரவ லாக எதிர்பார்க்கப்படுகிறது.

