ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கான முன்னாள் மலேசிய தூதர் பரமேஸ்வரன் (படம்) காலமானார் என்று 'த ஸ்டார்' ஏடு தெரிவித்தது. அவருக்கு வயது 74. சென்ற வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணியளவில் இஸ்கந்தர் புத்திரியில் உள்ள அவரது வீட்டில் நினைவின்றிக் கிடந்ததாக நண்பர் ஒருவர் மூலம் அறியப்படுகிறது. அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது. 2003 முதல் 2010 வரையில் சிங்கப்பூருக்கான மலேசிய தூதராக அவர் பதவி வகித்தார். ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பாவில் அவர் ஆறு பொறுப்புகளில் இருந்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அவர் தூதராகப் பணியாற்றியுள்ளார். 1948ல் கோலா கங்சாரில் பிறந்த அவர் 1969ல் மலேசிய வெளிநாட்டு சேவையில் ேசர்ந்தார்.
மலேசிய முன்னாள் தூதர் பரமேஸ்வரன் காலமானார்
1 mins read
-

