சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன்

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன்

1 mins read
879cee2b-a2bc-4042-b78b-ae2f1c0221b8
தனது நலவிரும்பி களைச் சந்திப் பதற்காக ஜோ பைடன் சைக்கிளை நிறுத்தும்போது நிலை தடு மாறினார். படம்: ஏஎஃப்பி -

ரெஹோ­போத் கடற்­கரை: அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் சைக்­கிளை நிறுத்­தும்­போது தடு­மாறி தவறி விழுந்­தார்.

சனிக்­கி­ழமை அன்று காலை­நேர உடற்­ப­யிற்­சி­யாக டெலவே­ரில் உள்ள ரெஹோ­போத் கடற்­க­ரை­யில் அவர் சைக்­கிள் ஓட்­டி­னார். அப்­போது தமது கடற்­கரை வீட்­டுக்கு அருகே காத்­தி­ருந்த சில­ரைச் சந்­திப்­ப­தற்­காக சைக்­கிளை நிறுத்த அவர் முயற்சி செய்­தார். ஆனால் நிலை தடு­மாறி அவர் கீழே விழுந்துவிட்டார். அவரை சுற்றியிருந்த பாதுகாப்பு அதி காரிகள் அவருக்கு உதவி செய்தனர். அவ­ருக்கு காயம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் மருத்­துவ சிகிச்­சைக்கு அவ­சி­யம் இல்லை என்­றும் சம்­ப­வத்­திற்­குப் பிறகு வெள்ளை மாளிகை பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

செய்­தி­யா­ளர்­கள் உட்­பட சிறு கூட்­டம் அவரை வர­வேற்க முற்­பட்­ட­போது அவர் தவறி விழுந்­தார். 'நான் நன்றாக இருக்கிறேன்,' என்று எழுந்தவுடன் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அன்றைய பொழுதை தமது குடும்பத்துடன் அதிபர் பைடன் செலவழித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.