ஹாங்காங்: மக்காவில் புதிதாக 12 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு மாபெரும் கொவிட்-19 சோதனையை நடத்தி வருகிறது.
கடந்த 250 நாள்களாக புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் திடீரென மூவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவசியமில்லாத வியாபாரத் தளங்களை மூடுமாறும் குடிமக்கள் வீட்டிலேயே தங்க வேண்டும் என்றும் மக்காவின் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
ஞாயிறு தொடங்கி செவ்வாய்க் கிழமை வரை அனைவருக்கும் தொற்று சோதனை நடத்தப்படும் என்று அத் துறையின் அதிகாரிகள் தெரிவித்து உளளனர்.
அடுத்த அறிவிப்பு வரும்வரை பள்ளிக்கூடங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. உணவு, அத்தியாவசியப் பொருள்கள் போதுமான அளவு இருப்ப தால் மக்கள் வாங்கிக் குவிக்க அவசியம் இல்லை என்று மக்காவ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் புதிய தொற்றுக்கான மூலத்தைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

