பழைய நிலையை நெருங்­கும் விமா­னப் பய­ணங்­கள்

பழைய நிலையை நெருங்­கும் விமா­னப் பய­ணங்­கள்

2 mins read
eb5c047d-b160-4a73-b519-c6ae5e9f5c3f
-

டோஹா: உலக அள­வில் விமா­னப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை கொவிட்-19 பர­வ­லுக்கு முன்பு இருந்த நிலை­யில் 83 விழுக்­காட்டை இவ்வாண்டு எட்­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

2023ல் அந்த எண்­ணிக்கை தொற்­றுப் பர­வ­லுக்கு முன்­பி­ருந்த அள­வை­விட அதி­க­மாக உய­ரும் என்று அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கம் கூறி­யுள்­ளது. மேலும், அடுத்த ஆண்டு விமா­னத் துறை மூன்று ஆண்­டு ­க­ளுக்­குப் பிறகு லாபத்தை எட்­டும் நிலை­யில் உள்­ள­தாக அச்­சங்­கம் கூறி­யது.

2022ஆம் ஆண்­டுக்­கான விமா­னத் துறையின் முன்­னு­ரைப்பை உயர்த்திப் பேசிய சங்­கத்­தின் தலைமை இயக்­கு­நர் வில்லி வால்ஷ், மக்­கள் இன்­னும் அதிக எண்­ணிக்­கை­யில் விமா­னப் பய­ணம் மேற்­கொள்­வ­தா­கக் கூறி­னார். பொரு­ளி­யல் குழப்­பம் அதி­க­ரித்­த­போ­தும், சரக்­கு­களும் தொடர்ந்து அதிக அள­வில் அனுப்­பப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

கடந்த 2020ல் விமா­னப் பயணி­ க­ளின் எண்­ணிக்கை 60 விழுக்­காடு குறைந்­தது. 2021ல் அது சற்­றே­தான் கூடி­யது. கடந்த ஈராண்­டு­களில் மட்­டும் விமான நிறு­வ­னங்­கள் கிட்­டத்­தட்ட 200 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$227 பி.) இழந்­தன.

சில விமான நிறு­வ­னங்­கள் நொடித்­துப் போயின. பெரும்­ பாலும் அர­சாங்க ஆத­ர­வு­பெற்­றவை தப்­பிப் ­பி­ழைத்­தன.

சென்ற 2021ஆம் ஆண்டு 42 பில்­லியன் டாலரை இழந்த நிறு­வ­னங்­க­ளுக்கு இவ்­வாண்டு 9.7 பில்­லி­யன் டாலர் இழப்பு மட்டுமே ஏற்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது ஏற்­கெ­னவே முன்­னு­ரைக்­கப்­பட்ட 11.6 பில்­லி­யன் டாலர் இழப்­பை­விட குறைவு.

கொவிட்-19 பர­வ­லால் சீனா முடங்கி உள்ள நிலை­யில் ஆசி­யா­வில் உள்ள விமான நிறு­வ­னங்­கள் அதிக இழப்­பைச் சந்­திக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அங்­குள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு 8.9 பில்­லி­யன் டாலர் இழப்பு ஏற்­படும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

வட அமெ­ரிக்­கா­தான் ஆகச் சிறப்­பாக மீட்சி அடைந்­துள்­ளது.

இருப்­பி­னும் எண்­ணெய் விலை, பண­வீக்­கம் ஆகி­ய­வற்­றின் உயர்வு, விமா­னத் துறை மீட்­சி­யைப் பாதிக்­கும் என்ற அச்­சம் உள்­ளது.

இரண்டு ஆண்­டுத் தேக்­கத்­துக்கு பிறகு விமா­னப் பய­ணங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தால், கட்­ட­ணங்­களும் அதி­கம் உயர்ந்­துள்­ளன.

இத­னால் கோடை­கா­லத்­துக்­குப் பிறகு விமா­னப் பய­ணங்­கள் மீண்­டும் வெகு­வா­கக் குறை­ய­லாம் என்ற அச்­ச­மும் உள்­ளது. ஆனால் திரு வால்ஷ் விமா­னப் பய­ணங்­ க­ளுக்­கான தேவை தொடர்ந்து உய­ரும் என்று கூறி­னார்.