சீனி விலையை உயர்த்­து­வது பற்றி மலே­சியா ஆய்வு

சீனி விலையை உயர்த்­து­வது பற்றி மலே­சியா ஆய்வு

1 mins read
65a0b834-cf18-448b-ad61-e66ac9234320
-

பெட்டாலிங் ஜயா: சீனிக்­கான அதி­க­பட்ச விலையை உயர்த்­து­வது பற்றி மலே­சியா ஆய்வு நடத்தி வரு­கிறது.

இந்த ஆண்­டு இறுதிக்­குள் அது குறித்த அறிக்கை அமைச்­ச­ர­வை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும் என்று உள்­நாட்டு வர்த்­தக, வாடிக்­கை­யா­ளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சின் தலைமை இயக்­கு­நர் அஸ்­மான் முக­மது யூசூஃப் தி ஸ்டார் நாளேட்­டி­டம் தெரி­வித்­தார்.

இது குறித்து தொடர்­பு­கொள்­ளப்­பட்­ட­போது, சிங்­கப்­பூர் 40க்கும் அதி­க­மான நாடு­க­ளி­ட­மி­ருந்து சீனியை இறக்­கு­மதி செய்­வ­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்பு கூறி­யது.

மலே­சி­யா­வில் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட சீனி­யின் அதி­க­பட்ச ஒட்­டு­மொத்த விலை, ஒரு கிலோ­கி­ரா­முக்கு 2.69 ரிங்­கிட் ஆகும். இதை உயர்த்த வேண்­டும் என்பது தொழிற்­துறையின் கோரிக்கை.