வாஷிங்­டன் துப்­பாக்­கிச்சூடு: ஒரு­வர் மரணம், பலர் காயம்

வாஷிங்­டன் துப்­பாக்­கிச்சூடு: ஒரு­வர் மரணம், பலர் காயம்

1 mins read
86ebe966-8644-47bc-b2ce-b7952630897a
-

வாஷிங்­டன்: வாஷிங்­ட­னில் முன்­ன­னு­மதி பெறாத இசை நிகழ்ச்­சி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு நடந்த துப்­பாக்­கிச் சூட்­டில் 15 வயது இளை­யர் ஒரு­வர் உயிர் இழந்­தார். ஒரு காவல்­துறை அதி­காரி உள்­ளிட்ட மூன்று பேருக்­குக் காயம் ஏற்­பட்­டது.

மொக்­கேலா என்ற அந்த வீதி இசை நிகழ்ச்­சி­யில் மாலை­யில் வன்­முறை ஏற்­பட்­டதை அடுத்து, அந்நிகழ்ச்­சியை நிறுத்­தி­ய­தாக காவல்துறையினர் கூறி­னர்.

பின்­னர் துப்­பாக்­கிச் சூடு எவ்­வாறு நடந்­தது என்­பது சரி­யா­கத் தெரி­ய­வில்லை. இருப்­பி­னும் காவல்­து­றை­யி­னர் எந்­தத் துப்­பாக்­கிச் சூடும் நடத்­த­வில்லை என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

காயம் அடைந்­த­வர்­க­ளின் உடல்­நிலை சீராக உள்­ளது என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.