பிரெஞ்சு அதி­பர் மெக்­ரோ­னுக்­குப் பின்­ன­டைவு

பிரெஞ்சு அதி­பர் மெக்­ரோ­னுக்­குப் பின்­ன­டைவு

1 mins read
29d9f4e4-ce5d-4c96-92c7-74c61d5b461f
-

பாரிஸ்: பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வேல் மெக்­ரோ­னின் கட்சி நேற்­று­முன்­தி­னம் நடந்த நாடா­ளு­மன்­றத் தேர்தலில் தனது பெரும்­பான்­மையை இழந்­த­தால் அவ­ருக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் திரு மெக்­ரோ­னின் தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கு 246 இடங்­கள் மட்­டுமே கிடைத்­தன.

பெரும்­பான்­மையை எட்ட அவரது தரப்பு 289 இடங்­க­ளைப் பெற்­றி­ருக்க வேண்­டும்.

சென்ற நாடா­ளு­மன்­றத்­தில் 308 உறுப்­பி­னர்­கள் திரு மெக்­ரோ­னுக்கு ஆத­ரவாக இருந்­த­னர்.

ஆனால் இந்­தத் தேர்­த­லில் பிரான்­சின் இடது சாரி, வலது சாரி இரண்­டை­யும் சேர்ந்த கட்­சி­க­ளுக்கு அதிக இடங்­கள் கிடைத்­துள்­ளன.

அதன் மூலம், பிரெஞ்சு அர­சி­யல் பிளவு அர­சி­யலை நோக்கி நகர்ந்­துள்­ளது.

திரு மெக்­ரோனால் சில மாதங்­ க­ளுக்கு முன்­னர் நிய­மிக்­கப்­பட்ட பிர­த­ம­ரான திரு­வாட்டி எலி­ச­பெத் போர்ன், இது­போன்ற நாடா­ளு­மன்­றம் பிரான்­சுக்கு தேசிய அள­வி­லும் அனைத்­து­லக அள­வி­லும் அபா­யத்தை ஏற்படுத்தும் என்­றார். அவர் நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை உரு­வாக்க முயற்சி செய்­யப்­போ­வ­தா­க­வும் கூறி­னார்.

ஆனால் அது எளி­தல்ல என்று அர­சி­யல் நிபு­ணர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் இரண்­டாம் தவ­ணையை வென்ற திரு மெக்­ரோ­னுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டங்­களை இயற்­று­வது பெரும்­பா­டாக இருக்­கும் என்று அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.