இந்­தியா- தென் ஆப்­பி­ரிக்கா 20 ஓவர் போட்­டி­யின் 5வது ஆட்­டம் கைவி­டப்­பட்­டது

இந்­தியா- தென் ஆப்­பி­ரிக்கா 20 ஓவர் போட்­டி­யின் 5வது ஆட்­டம் கைவி­டப்­பட்­டது

1 mins read
909fe682-4149-4875-b687-0da1f6874b15
-

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வுக்கும் தென் ஆப்­பி­ரிக்­கா­வுக்­கும் இடை­யி­லான ஐந்­தா­வது 20 ஓவர் கிரிக்­கெட் போட்டி மழை கார­ண­மாக கைவி­டப்­பட்­டது.

அத­னால் இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான அந்தப் போட்­டித் தொடர் சம­நி­லை­யில் முடிந்­தது.

ஐந்­தா­வது 20 ஓவர் போட்டி பெங்­க­ளூ­ரு­வில் உள்ள சின்­ன­சாமி விளை­யாட்­டரங்­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது.

இந்­தப் போட்­டி­யில் டாஸ் வென்ற தென் ஆப்­பி­ரிக்க அணி முத­லில் பந்து வீச்சை தேர்வு செய்­தது.

இதன்­படி இந்­திய அணி களம் இறங்கி பந்தடிக்க இருந்த நிலை­யில், மழையால் தொடங்­கு­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டது.

பின்­னர் மழை நின்­ற­வு­டன் போட்டி 19 ஓவர்­க­ளாக குறைக்­கப்­பட்டு தொடங்­கி­யது.

களம் இறங்கி விளை­யா­டிய இந்­திய அணி­யில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 ரன் எடுத்த நிலை­யில் ஆட்­ட­மி­ழந்­தார்.

கெய்க்­வாட் 10 ரன்­னு­டன் வெளி­யே­றி­னார். இந்­திய அணி 3.3 ஒவர் முடி­வில் 2 விக்­கெட் இழப்­பிற்கு 28 ஓட்டங்கள் எடுத்­தி­ருந்த நிலை­யில் மீண்­டும் மழை பெய்­த­தால் போட்டி பாதிக்­கப்­பட்­டது.

மழை நிற்­கா­த­தால், போட்டி கைவி­டப்­ப­டு­வ­தாக இந்தியாவின் பிசி­சிஐ அமைப்பு அறி­வித்­தது.

இத­னால் ரசி­கர்­கள் ஏமாற்­றம் அடைந்­த­னர். போட்­டிக்­கான கட்­ட­ணத்­தில் 50 விழுக்­காடு ரசி­கர்­க­ளுக்கு திருப்­பித் தரப்­படும் என்று கர்­நா­டக கிரிக்­கெட் சங்­கம் அறிவித்தது.