வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பங்ளாதேஷில் மக்களுக்கு உணவும் உதவியும் அளிக்க அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
சுனம்கஞ்ச், சில்ஹெத் வட்டாரங்களில் 4 மில்லியன் பேர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தொடங்கிய வெள்ளத்தில் 10க்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்தனர்.
பல மில்லியன் பேருக்கு மின்சார இணைப்பு மீண்டும்
கிடைக்கவில்லை என்று ஊடகங்கள் கூறின. படம்: ஏஎஃப்பி

