வலையில் சிக்கிய உலகின் ஆகப்பெரிய நன்னீர் மீன்

வலையில் சிக்கிய உலகின் ஆகப்பெரிய நன்னீர் மீன்

1 mins read
e7340eef-d7cb-471c-b359-3ec76786c99b
படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

உலகின் ஆகப்பெரிய நன்னீர் மீன் கம்போடியாவில் சிக்கியுள்ளது. அந்த திருக்கை மீனின் எடை 300 கிலோ, நான்கு மீட்டர் நீளம்.

கம்போடியாவின் மிக்கோங் ஆற்றில் ஒரு மீனவர் வலையில் அது மாட்டியது.

20 ஆண்டுகளில் நன்னீரில் இதுபோன்ற மீனை பார்த்ததில்லை என ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் கூறினர். இந்த மீன்பற்றி மேலும் அறிந்துகொள்ள அதற்கு டெக் பொருத்தப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.

இதற்கு முன் 2005ல் இதே ஆற்றில் ராட்சத கெளுத்தி மீன் பிடிபட்டது. அதன் எடை 293 கிலோகிராம்.

மிக்கோங் ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் வகைகள் வாழ்கின்றன. சில வகை மீன்கள் மூன்று மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. அவற்றின் எடை 270 கிலோகிராம் வரை போகலாம் எனக் கூறப்பட்டது.