மூழ்கியது மிதக்கும் உணவகம்

மூழ்கியது மிதக்கும் உணவகம்

1 mins read
17d1c88d-d045-49ee-b2dc-3fda86083b7b
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது ஜம்போ மிதக்கும் உணவகம் (படம்: ஏஃபி) -

ஹாங்காங்கின் பிரபல மிதக்கும் உணவகமான ஜம்போ தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது. நகரின் கரையோரத்திலிருந்து உணவகத்தை இழுத்துச்செல்லும்போது அது மூழ்கியது. ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அது மூழ்கியிருப்பதால், அதை மீட்பது சிரமமான பணியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது ஜம்போ மிதக்கும் உணவகம். கடந்த பத்து ஆண்டுகளாக உணவகம் அதிக இலாபம் பார்க்கவில்லை. இதனால் இவ்வாண்டு மார்ச் மாதம் அது மூடப்பட்டது.

1976ல் கட்டப்பட்ட இந்த உணவகம், சீன மாளிகை போன்ற தோற்றம் கொண்டது. எலிசபெத் ராணி உள்ளிட்ட பல உள்ளூர், வெளியூர் பிரபலங்கள் இங்கு வந்துள்ளனர். பல திரைப்படங்களும் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன.