நோபெல் பதக்கத்தை விற்று உக்ரேனுக்கு உதவும் ர‌ஷ்யர்

நோபெல் பதக்கத்தை விற்று உக்ரேனுக்கு உதவும் ர‌ஷ்யர்

1 mins read
68020f8b-7d28-4bf3-9dd3-8e90f9be3348
தமது நோபெல் பதக்கத்துடன் டிமிட்ரி முரடோ (படம்: ராய்ட்டர்ஸ்) -

ர‌ஷ்ய செய்தியாளர் ஒருவர் தமக்கு கிடைத்த நோபெல் பதக்கத்தை $144 மில்லியனுக்கு ஏலத்தில் விற்றுள்ளார். இதிலிருந்து கிடைத்த பணம் அனைத்தையும் போரால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய சிறுவர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

டிமிட்ரி முரடோவுக்கு 2021ல் நோபெல் பரிசு கிடைத்தது. அமைதி, ஜன­நா­ய­கத்­திற்­கான அடிப்­ப­டை­யாக கருத்து சுதந்­தி­ரம் இருப்­பதை வலி­யு­றுத்­தி­ய­தற்­காக இவருக்கு விருது வழங்கப்பட்டது.

"நோவாஜா கெஜெட்டா என்ற செய்­தித்­தா­ளின் துணை நிறு­வ­ன­ரான முர­டோவ், பல ஆண்­டு­க­ளாக கடும் சவா­லான சூழ்­நி­லை­யில் ரஷ்­யா­வில் கருத்து சுதந்­தி­ரத்­தைப் பாது­காத்து வருவதாகக் கூறினார்.

இந்நிலையில் உக்ரேனை ஆக்கிரமிக்க முயற்சிசெய்து வரும் ர‌ஷ்யாவுக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களை சிறையில் அடைத்துவருகிறது அந்நாட்டு அரசாங்கம். இதனால் மார்ச் மாதம் தமது செய்தித்தாள் நிறுவனத்தை முரடோவ் மூடினார்.

போரால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள். அவர்களுக்கு உதவுவதுதான் நமது தலையாயக் கடமை என்றார் முரடோவ்.