இம்மாதம் புட்டினைச் சந்திக்கவுள்ள விடோடோ

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சிய அதி­ப­ரும் ஜி-20 அமைப்­பின் தற்­போ­தைய தலை­வ­ரு­மான ஜோக்கோ விடோடோ, ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னு­டன் இம்­மா­தம் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளார். இந்­தோனீ­சி­யா­வின் பாது­காப்பு அமைச்­சர் இந்தத் தகவலைத் தெரி­வித்­த­தாக அந்­நாட்­டின் அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான அமைப்பு ஒன்று கூறி­யது.

ஜி-20 அமைப்­பைச் சேர்ந்த முக்­கிய பொரு­ளி­யல் நாடு­கள் இவ்­வாண்டு மேற்­கொள்­ள­வி­ருக்­கும் சந்­திப்­புக்கு உக்­ரேன் போரால் பாதிப்பு வந்துள்ளது. சந்­திப்­பைப் புறக்­க­ணிக்­கப்­போ­வ­தா­க­வும் அதி­லி­ருந்து ரஷ்­யாவை வெளி­யேற்ற முயற்­சி­ எடுக்கப்போவதாகவும் மேற்­கத்­திய நாடு­கள் கூறி வரு­கின்­றன. அத­னால் ஜி-20 நாடு­களை ஒற்­றுமை­யாக வைத்­தி­ருக்க இந்­தோ­னீ­சியா சிர­மப்­பட்டு வந்­துள்­ளது.

இம்­மா­தம் 30ஆம் தேதி­யன்று ேஜாக்­கோவி என்­ற­ழைக்­கப்­படும் திரு விடோடோ, திரு புட்­டி­னைச் சந்­திப்­பார் என்று அந்­தாரா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. ரஷ்ய அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான டாஸ் ஊட­க­மும் இதை உறுதிப்­ப­டுத்­தியது.

மாஸ்­கோ­விற்­குப் பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு ஜி-7 சந்­திப்பு ஒன்­றில் கலந்­து­கொள்ள திரு விடோடோ ஜெர்­ம­னிக்­குப் பய­ணம் மேற்­கொள்­வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!