சீனாவில் வரலாறு காணாத அளவில் வெள்ளம்

சீனாவில் வரலாறு காணாத அளவில் வெள்ளம்

1 mins read
9ed347d0-c59c-4d55-a60f-b9751d4a2039
-

பெய்­ஜிங்: சீனா­வின் தெற்­குப் பகு­தி­யில் உள்ள இரண்டு மாநி­லங்­களில் வெள்ள அபாய எச்­சரிக்­கை­ உயர்த்­தப்­பட்­டுள்­ளது. ஆறு­களில் நீர் கரை­புரண்டதாலும் வர­லாறு காணாத அள­வில் நீர் சேர்ந்ததாலும் இந்­நிலை உரு­வாகி­யுள்­ளது.

அத­னால் மக்­கள் பலர் தங்­களின் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற நேரிட்­ட­தாக உள்­ளூர் அர­சாங்க ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

குவாங்­டோங் மாநி­லத்­தின் ஷாவ்­கு­வான் நக­ரில் சென்ற மாத இறுதியிலிருந்து இது­வரை காணாத அளவு மழை பெய்­துள்ளது. அங்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை ஆக உய­ரிய அளவுக்கு அதி­க­ரிக்­கப்­பட்­டது.

உய­ர­மான இடங்­க­ளுக்­குச் செல்­லு­மாறு ஆறு­க­ளுக்கு அரு­கி­லும் தாழ்­வான பகு­தி­க­ளி­லும் வசிப்­போரை அதி­கா­ரி­கள் கேட்டுக்­கொண்­ட­னர்.

ஜியாங்சீ மாநி­லத்­தி­லும் வெள்ள அபாய எச்­ச­ரிக்கை உயர்த்­தப்­பட்­ட­தாக சின்­ஹுவா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. அங்கு ஒன்­பது வட்­டா­ரங்­களில் வசிக்­கும் 485,000 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். சின்­ஹுவா மேல்­விவரம் ஏதும் தர­வில்லை.

இந்த மாதத் தொடக்கத்தில் சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் குறைந்தது 21 பேர் மாண்டனர்.