விலைவாசி உயர்வைச் சமாளிக்க மலேசியா 630 மி. ரிங்கிட் உதவி

புத்ரா ஜெயா: விலை­வாசி உயர்­வைச் சமா­ளிக்க மலே­சியா இந்த மாத இறு­தி­யி­லி­ருந்து வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­கு 630 மில்­லி­யன் ரிங்­கிட் கூடு­தல் உதவியை அறி­வித்­துள்­ளது.

வாழ்க்­கைச் செல­வி­ன­மும் அண்­மை­யில் உணவு விலை­களும் உயர்ந்­துள்­ள­தைக் கருத்­தில் கொண்டு அர­சாங்­கம் அந்த முடி­வுக்கு வந்­த­தாக பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் கூறி­னார். நேற்று தொலைக்­காட்­சி­யில் நேர­டி­யாக பேசிய­போது அவர் இதை அறி­வித்­தார்.

மலே­சிய வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் ஏற்கெனவே அறி­விக்­கப்­பட்ட குடும்ப உத­வித் திட்­டத்­தின் இரண்­டா­வது கட்­ட­மாக இக்­கூ­டு­தல் உதவி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­வழி, மலே­சியா இவ்­வாண்டு ஒட்­டு­மொத்­த­மாக வச­தி­கு­றைந்­தோ­ருக்கு 1.74 பில்­லி­யன் ரிங்­கிட் நிதி உதவி வழங்­கும்.

சுமார் 4 மில்­லி­யன் குடும்­பங்­களும் 4.6 மில்­லி­யன் தனி­ந­பர்­களும் இத­னால் பயன்­பெ­று­வர் என்­றார் திரு இஸ்மாயில்.

வரும் திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து அத்­தொகை வழங்­கப்­படும்.

மேலும், சமை­யல் எண்­ணெய் மானி­யத்தை அகற்­றப்பட்ட­போ­தும், ஒரு கிலோ­கி­ராம் பொட்­ட­லங்­களில் உள்ள சமை­யல் எண்­ணெய்க்­கான மானி­யம் தொடர்ந்து வழங்­கப்­படும் என்­றும் திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!