ரணில்: இலங்கைப் பொருளியல் சரிந்தது

கொழும்பு: இலங்­கைப் பொரு­ளி­யல் முற்­றி­லும் சரிந்­துள்­ள­தாக அந்­நாட்­டுப் பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்கே கூறி­யுள்­ளார். எரி­வாயு, மின்­சா­ரம், உண­வுத் தட்­டுப்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்ட நிலையை நாடு எதிர்நோக்கு ­வ­தாக அவர் நேற்று நாடாளு­மன்­றத்­தில் கூறி­னார்.

சிலோன் பெட்­ரோ­லிய நிறு­வ­னம் தற்­போது 700 மில்­லி­யன் டாலர் கட­னில் உள்­ளது. எண்­ணெய் வாங்கி இறக்­கு­மதி செய்­வ­தற்கு இலங்­கை­யி­டம் பணம் இல்லை என்­றும் எந்த நாடும் இலங்­கைக்கு எண்­ணெய் ஏற்­று­மதி செய்ய ஆயத்­த­மாக இல்லை என்­றும் அவர் கூறி­னார்.

இலங்­கை­யின் வெளி­நாட்டு நாணய இருப்பு கரைந்­து­கொண்­டி­ருந்­த­போது, அர­சாங்­கம் உரிய நேரத்­தில் நிலை­மையை சரி­செய்­யத் தவ­றி­விட்­ட­தாக நிதி அமைச்­சருமான திரு ரணில் குறிப்­பிட்­டார்.

பொரு­ளி­ய­லைத் தூக்கி நிறுத்த இந்­தியா, சீனா, ஜப்­பான் ஆகிய நாடு­களை இலங்கை கொடை­யா­ளர் மாநாட்­டுக்கு அழைக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கூடு­தல் கடன் உதவி வழங்­கு­வது பற்றி கலந்­து­ரை­யாட உயர்­மட்ட இந்­தி­யக் குழு இன்று கொழும்பு வரு­கிறது.

பொரு­ளி­யலை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­களில் ஒன்­றாக சூதாட்­டக் கூடங்­களை நடத்தி வந்த செல்­வந்­தர் தம்­மிக்கா பெரேரா நாடாளு­மன்­றத்­துக்கு நிய­மிக்­கப்­பட்­டார். முத­லீட்டு மேம்­பாட்­டுக்கு பொறுப்பு ஏற்­றுக்­கொண்டு அவர் விரை­வில் அமைச்­ச­ர­வை­யில் சேர்க்­கப்­ப­டு­வார்.

அதி­பர் கோத்­த­பய ராஜ­பக்­சே­வின் ஆத­ர­வ­ா­ள­ரான திரு பெரேரா ­மீது திரு ரணில் முன்பு ஊழல் குற்­றச்­­சாட்டை சுமத்­தி­யிருந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!