பிரிட்டனில் 40 ஆண்டு இல்லாத விலை உயர்வு

பிரிட்டனில் 40 ஆண்டு இல்லாத விலை உயர்வு

2 mins read
eb57c51c-8f3c-4616-8488-ae203647f154
-

லண்­டன்: பிரிட்­ட­னில் 40 ஆண்டு ­க­ளாக இல்­லாத அள­வுக்கு விலை­வாசி உயர்ந்­தி­ருந்­தி­ருக்­கிறது.

பண­வீக்­கம் வரும் மாதங்­களில் மேலும் உய­ரும் என்­றும் எச்­ச­ரிக்­கப்­பட்­டது.

பிரிட்­ட­னில் கடந்த மே மாதம் பண­வீக்­கம் 9.1 விழுக்­காடு உயர்ந்­தது. கடந்த 1982க்குப் பிறகு அங்கு இந்த அள­வுக்கு பண­வீக்­கம் கூடி­ய­தில்லை. ஒப்­பு­நோக்க ஏப்­ரலில் நாட்­டில் பண­வீக்­கம் 9 விழுக்­காடு உயர்ந்­தி­ருந்­தது.

மே மாதத்­தில் இந்த அளவு பண­வீக்­கம் கூடி­ய­தற்கு உணவு விலை உயர்வு முக்­கி­யக் கார­ணம் என்று பிரிட்­டிஷ் புள்­ளி­வி­வர அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் அந்­த­நாட்­டில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு மின்­சா­ரக் கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­பட்­டன.

பிரிட்­ட­னில் இந்த ஆண்டு இறு­திக்­குள் பண­வீக்­கம் இரட்டை இலக்­கத்தை எட்­டும் என்று பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் முன்­னு­ரைத்­துள்­ள­னர்.

விலை­வாசி தொடர்ந்து உய­ரும் இந்­நி­லை­யில் சம்­பள உயர்வு பெறா­விட்­டால் வேலை நிறுத்­தம் செய்­யக்­கூ­டும் என்று பிரிட்­டிஷ் ஆசி­ரி­யர்­களும் அஞ்­சல்­துறை ஊழி­யர்­களும் எச்­ச­ரித்­துள்­ள­னர். வேலை நிறுத்­தம் செய்­வது பற்றி அவர் களது தொழிற்­சங்­கங்­கள் தனித்­ த­னியே வாக்­கெ­டுப்பை நடத்­தும்.

ஏற்­கெ­னவே சுமார் 40,000 பிரிட்­டிஷ் ரயில்வே ஊழி­யர்­கள் நேற்­று­முன்­தி­னம் வேலை நிறுத்­தத்­தைத் தொடங்­கி­னர். பிரிட்­ட­னில் 30 ஆண்­டுக்­குப் பிறகு நடக்கும் ஆகப் பெரிய வேலை நிறுத்­தத்­தில் பல மில்­லி­யன் ரயில் பயணி­கள் பாதிக்­கப்­பட்­ட­னர்.

தொழிற்­சங்­கங்­களை இதில் வெல்ல அனு­ம­திக்­கக்­கூ­டாது என்­றும் சம்­பள உயர்வு பண­வீக்க கட்­டுக்கடங்­கா­மல் உய­ரச் செய்­யும் என்­றும் துணைப் பிர­த­மர் டோமி­னிக் ராப் எச்­ச­ரித்­தார்.