உவால்டே பள்ளி இடிக்கப்படும்

உவால்டே பள்ளி இடிக்கப்படும்

1 mins read
5d62fe64-fa01-4359-8a3b-8068010d84b2
-

உவால்டே: கடந்த மே மாதம் 21 பேர் உயிரிழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்த டெக்சஸ் பள்ளிக்கட்டடம் இடிக்கப்படும்.

ரோப் தொடக்கபள்ளி கட்டடம் இடிக்கப்படும் என்று உவால்டே நகர மேயர் டோன் மெக்லாவ்லின் கூறினார்.

ஆனால் அந்தக் கட்டடம் எப்போது இடிக்கப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்த பல பள்ளிகள் இதற்கு முன் இடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உவால்டே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து மாநிலச் சட்டமன்றத்தில் நடந்த விசாரணையில், காவல்துறையினரின் செயல்கள் குறைகூறப்பட்டன. தேவைப்படாத அறைச்சாவியைத் தேடி, நீண்ட நேரத்தைக் காவல்துறையினர் வீணடித்து விட்டனர் என்று பொதுப் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதாவை அமெரிக்கா விரைந்து நிறைவேற்ற செனட் சபை ஒப்புக்கொண்டுள்ளது.

ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் தாக்கல் செய்த அந்த இருதரப்பு மசோதா அடுத்த வாரம் சட்டமாகக் கூடும்.