பாரிஸ்: இவ்வாண்டு எரிசக்தித் துறையில் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலரில் (S$3.33 டிரில்லியன்) முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கு ஒதுக்கப்பட்டபோதிலும், தற்போதைய எரிசக்தி நெருக்கடியைத் தணிக்க அது போதாது என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு எச்சரித்தது.
அத்துடன், 2050ல் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நீக்கும் பருவநிலை மாற்ற இலக்கு களை எட்ட அது நிச்சயம் போதாது என்றும் அமைப்பு கறிப்பிட்டது.
இவ்வாண்டு செலவாகும் தொகையில் பாதி, எரிசக்தி விலை உயர்வை ஈடுக்கட்ட பயன்படும் என்றது அமைப்பு. மேலும், ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தக் கூடும் என்று அது எச்சரித்தது.

