ஹாங்காங் தீயால் 20,000 வீடுகளுக்கு மின்தடை

ஹாங்காங் தீயால் 20,000 வீடுகளுக்கு மின்தடை

1 mins read
d7357094-a457-4739-ae69-3a3ce595dddb
-

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் எற்­பட்ட தீயால், அங்­குள்ள 20,000 வீடு­களில் ­இ­ரண்டு நாள்­க­ளுக்கு மின்­வ­சதி தடை­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் இரவு நடந்த அச்சம்­ப­வம் பற்றி ஹாங்­காங் அர­சாங்­கம் விசா­ர­ணை­ கோரி­யுள்­ளது. ஹாங்­காங்­கின் வடக்­கில் உள்ள யுவென் லோங் வட்­டா­ரத்­தில் தனது மின்­கம்­பிப் பாலங்­கள் தீப்­பி­டித்­துக்­கொண்­ட­தாக (படம்) சிஎல்பி பவர் எனும் மின் நிறு­வ­னம் கூறி­யது. யாருக்­கும் அதில் காய­மில்லை. சுமார் 160,000 வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மின்­சா­ரம் தடை­பட்­டது. ஆனால் பெரும்­பா­லா­னோ­ருக்கு மீண்­டும் மின்­ இணைப்பு கிடைத்­து­விட்­டது.

ஹாங்காங்கில் பெரிய மின்தடை ஏற்படுவது அரிது.