நியூசிலாந்தில் கத்திக்குத்து சம்பவம்: நால்வர் காயம்

நியூசிலாந்தில் கத்திக்குத்து சம்பவம்: நால்வர் காயம்

1 mins read
871ebed2-1535-42a6-b7aa-6cabac584602
படம்: ஏஃபி -

நியூசிலாந்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களை குத்த ஆடவர் ஒருவர் முயன்றார். அவரைப் பொதுமக்கள் சிலர் வலைத்துப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஆக்லாந்து தெருக்களில் ஒரு பெரிய கத்தியுடன் சுற்றித் திரிந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். சில பொதுமக்கள் அவரைப் பின்தொடர்ந்து, தக்க சமயத்தில் அவரை வலைத்துப் பிடித்ததாகக் கூறப்பட்டது. இதில் சந்தேக நபருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகக் காவல் துறை குறிப்பிட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிகிறது.

தாக்குதலுக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

துணிச்சலுடன் சந்தேக நபரை பிடித்த பொதுமக்களை காவல் துறையினர் பாராட்டினர்.

சென்றாண்டு நியூசிலாந்தில் இரண்டு கத்திக் குத்து சம்பவங்கள் நடந்தன.