நிவாரணப் பணியில் இடையூறு

நிவாரணப் பணியில் இடையூறு

1 mins read
04e415c6-e3ce-4814-87d1-0df891696fd0
குறைந்தது 1,000 பேரைப் பலிவாங்கியநிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானின் பட்டிக்கா மாநிலத்தில் இருக்கும் காயான் வட்டாரத்தில் மிகுந்த சேதத்திற்கு உள்ளான வீடுகள்.படம்: ஏஎஃப்பி -

ஷரன் (ஆப்­கா­னிஸ்­தான்): நில­நடுக்­கத்­தால் அவ­திக்கு உள்­ளா­கி­யிருக்கும் ஆப்­கா­னிஸ்­தா­னின் தொலை­தூ­ரப் பகுதி ஒன்­றில் நேற்று முதல் நிவா­ர­ணப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எனி­னும், சரி­யான தொடர்­பு­கள் இல்­லா­தது, ஒழுங்­கான சாலை­கள் போடப்படாதது ஆகிய கார­ணங்­களால் நிவா­ர­ணப் பணி­க­ளுக்கு இடை­யூறு ஏற்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் 6.1 ரிக்­டர் அள­வி­லான நில­ந­டுக்­கம் ஆப்­கானிஸ்­தானை உலுக்­கி­யது. குறைந்­தது 1,000 பேர் மர­ண­ம்­அடைந்­த­னர். சுமார் 1,500 பேர் காய­ம­டைந்­த­னர். 3,000க்கும் அதி­க­மான வீடு­கள் சேத­ம­டைந்­தன.

தனது உலக உண­வுத் திட்­டத்­தின்­கீழ் உணவு மற்­றும் தள­வாடங்­களை ஆப்­கா­னிஸ்­தா­னின் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு அனுப்பி வரு­வ­தாக ஐக்­கிய நாட்டு நிறு­வனம் தெரி­வித்­தது. முத­லில் 3,000 குடும்­பங்­க­ளுக்கு உத­வு­வது இலக்கு.

அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டோருக்கு உத­வு­மாறு அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் உத்­த­ர­விட்டுள்­ள­தாக அந்­நாட்­டின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் ஜேக் சலி­வன் அறிக்கை ஒன்­றில் கூறினார். ஐரோப்பிய ஒன்றியமும் உடனடியாக உதவி வழங்கப்போவதாகத் தெரிவித்தது.

ஜப்பான், தென்கொரியா, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகியவையும் உதவி வழங்க முன்வந்துள்ளன.

தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு உதவியையும் ஆதரவையும் வழங்க இந்தியா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: ஜப்பான், தென்கொரியா உள்ளிட்டவை உதவ முன்வந்துள்ளன