சிறையில் தனிமைப்படுத்தப்படும் ஆங் சான் சூச்சி

சிறையில் தனிமைப்படுத்தப்படும் ஆங் சான் சூச்சி

1 mins read
525ca83f-ce90-46a8-8829-0455065795f2
-

யங்­கூன்: வீட்­டுக் காவ­லில் இருந்து வந்த மியன்­மா­ரின் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூச்சி சிறை­யில் அடைக்கப்­பட்­டுள்­ளார். தலை­ந­கர் நேப்­பி­டோ­வில் உள்ள சிறை­யில் அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக மியன்­மா­ரின் ராணுவ அர­சாங்­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

மியன்­மா­ரில் சென்ற ஆண்டு ராணு­வம் வலுக்­கட்­டா­ய­மாக ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. அதற்­குப் பிறகு 77 வயது திரு­வாட்டி சூச்சி நேப்­பி­டோ­வில் வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்டு வந்­தார். அவர் வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்ட இடத்­தின் தக­வல்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

ஊழல், ராணு­வத்­திற்கு எதி­ராக வெறுப்­பைத் தூண்­டி­யது உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் திரு­வாட்டி சூச்சி மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டன. இது­வரை அவ­ருக்கு 11 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மியன்­மா­ரில் முன்­ன­தாக ராணு­வம் ஆட்­சி­யில் இருந்­த­போது திரு­வாட்டி சூச்சி பலமுறை வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.