கோலாலம்பூர்: உலகில் இரண்டாவது ஆக அதிக அளவில் செம்பனை எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடான மலேசியாவில் தோட்ட, உற்பத்தி, கட்டுமானத் துறைகளில் குறைந்தது 1.2 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் அதிகரிப்பதையொட்டி இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மலேசியா அதன் எல்லைகளைத் திறந்தது. எனினும், அங்கு வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அவ்வளவு அதிகரிக்கவில்லை. வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது போன்றவை அதற்கான காரணங்கள்.
இதற்கிடையே, மலேசியாவின் செம்பனை எண்ணெய் நிறுவனமான குலிம் பெர்ஹாட், கொள்ளைநோய்ப் பரவல் காலத்திற்குப் பிறகு முதன்முறையாக வெளிநாட்டு ஊழியர்களை நியமித்துள்ளது. இந்தோனீசியாவின் லொம்பொக் தீவிலிருந்து 37 பேரை வேலைக்கு எடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.

