சர்ச்சைக்குரிய கருத்தை மீட்டுக்கொண்ட மகாதீர் முகம்மது

சர்ச்சைக்குரிய கருத்தை மீட்டுக்கொண்ட மகாதீர் முகம்மது

1 mins read
d5b5d599-1118-4890-9984-3f28059fcf9a
-

பெட்­டா­லிங் ஜெயா: சிங்­கப்­பூர் உள்­ளிட்ட தான் இழந்த பகு­தி­களை மலேசியா மீட்­டுக்­கொள்­ள­வேண்டும் என்று தாம் கூற­வில்லை என்று முன்­னாள் மலே­சிய பிர­த­மர் மகா­தீர் முகம்­மது விளக்கியுள்ளார். பெட்ரா பிராங்கா தீவை இழந்­ததைப் பற்றியே தாம் பேசி­ய­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

"மேசை அள­வில் உள்ள பாறையை இழந்­ததை நினைத்து மலே­சியா வருத்­தப்­ப­டு­கிறது, ஆனால் இழந்த பெரிய பகு­தி­களைக் கருதி அது அக்­கறை கொள்­ள­வில்லை என்­ப­தையே சுட்­டிக்காட்­டி­னேன்," என்று 96 வயது திரு மகா­தீர் குறிப்­பிட்­டார். பெட்ரா பிராங்கா தீவை இழந்ததை எண்ணி மலேசியா அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

தாம் தெரி­வித்திருந்த கருத்­து­கள் தவ­றா­கப் புரிந்­து­கொள்­ளப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.