'உணவுப் பற்றாக்குறையால் மில்லியன்கணக்கானோர் இறக்கலாம்'

'உணவுப் பற்றாக்குறையால் மில்லியன்கணக்கானோர் இறக்கலாம்'

1 mins read
c966cf15-176d-4b1f-8469-9e67335a718e
-

யோக்­ய­கார்த்தா (இந்­தோ­னீ­சியா): உக்­ரேன் போரால் நில­வும் உண­வுப் பற்­றாக்­குறை உல­கில் மில்­லி­யன் கணக்­கா­னோ­ரைப் பலி­வாங்­கக்­கூடும் என்று முக்­கிய உதவி அமைப்­பின் ஒன்­றின் தலை­வர் ஒரு­வர் எச்­ச­ரித்­துள்­ளார். உண­வுப் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­படும் மக்­க­ள் கொள்­ளை­நோய்­களுக்கு ஆளா­க­லாம் என்­றும் அது உல­கின் அடுத்த சுகா­தார நெருக்கடியை உரு­வாக்­க­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

உக்­ரேன், உல­கில் கோதுமை, சோளம் ஆகி­ய­வற்றை நான்­கா­வது ஆக அதி­க­ அளவில் ஏற்­று­மதி செய்­யும் நாடு.

அந்­நாட்­டின் கருங்­கடல் துறை­மு­கங்­களை ரஷ்­யா­வின் கடற்­ப­டை­கள் முடக்­கி­விட்­டன.

அதைத் தொடர்ந்து குறைந்த வரு­மான நாடு­களில் உண­வுப்பற்றாக்குறை ஏற்­பட்­டுள்­ளது. அத­னால் அவற்றில் பலர் பசி­யில் வாடு­கின்­ற­னர்.

உண­வுப் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­படும் பலர் பசி­யால் மட்­டும் இறக்­க­மாட்­டார்­கள். போது­மான ஊட்­டச்­சத்து இல்­லா­த­தால் அவர்­க­ளின் உடல்­களில் நோய் எதிர்ப்பு சக்தி குறை­யும். அத­னால் அவர்­கள் கொள்­ளைநோய்­க­ளுக்கு ஆளா­கி­யும் உயி­ரி­ழக்­க­லாம் என்று எய்ட்ஸ், காசநோய், மலே­ரியா ஆகிய நோய்­க­ளுக்­கான உலக நிதி­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் பீட்­டர் சேண்­ட்ஸ் குறிப்­பிட்­டுள்­ளார்.

உலக நாடு­க­ளின் அர­சாங்­கங்­கள் வறு­மை­யால் ஆக அதி­க­மாக வாடும் சமூ­கத்­தி­ன­ருக்கு முதல்நிலை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­களை வழங்கி உண­வுப் பற்­றாக்­கு­றை­யின் தாக்­கத்­தைக் குறைக்­க­வேண்­டும் என்று பிரிட்­ட­னைச் சேர்ந்த முன்­னாள் வங்கி அதி­கா­ரி­யான திரு சேண்ட்ஸ் சொன்­னார்.

"கொள்ளைநோய்கள், உணவுப் பற்றாக்குறை, எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றின் ஒட்டுமொத்த தாக்கத்தால் கூடுதலாக மில்லியன் கணக்கானோர் இறக்கலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.