20 மி. மரணங்கள் தவிர்ப்பு

20 மி. மரணங்கள் தவிர்ப்பு

2 mins read
8c902db8-e212-4bf1-8a65-c6088ffaf1c7
-

சிங்­கப்­பூர்: உல­கில் நிக­ழ­வி­ருந்த கொவிட்-19 தொற்று மர­ணங்­களை தடுப்­பூசி பாதி­யா­கக் குறைத்­துள்­ளது. அதா­வது தடுப்­பூசி அறி­முக மான முதல் ஆண்­டில் 19.8 மில்லியன் மரணங்­கள் தடுக்­கப்­பட்­ட­தாக 'த லான்ெசட்' தொற்­று­நோய் சஞ்­சி­கை­யில் வெளி­யான ஆய்­வுக் கட்­டுரை தெரி­விக்­கிறது.

தடுப்­பூ­சியை பெரி­தும் நம்­பி­யி­ருந்த அதிக வரு­மா­னம் கொண்ட நாடு­களில் பெரும்­பா­லான மர­ணங்­கள் தவிர்க்­கப்­பட்­டுள்­ளன என்று ஆய்­வின் ஆசி­ரி­யர் கூறி­னார்.

2020 டிசம்­பர் 8ஆம் தேதி தடுப்­பூசி தொடங்­கப்­பட்ட முதலாம் ஆண்­டில் யாருக்­கும் தடுப்­பூசி போடா­மல் இருந்­தி­ருந்­தால் 31.4 மில்லியன் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று இம்­பீ­ரி­யல் காலேஜ் லண்­ட­னைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் தெரிவித்த னர்.

இருந்­தா­லும் தடுப்­பூ­சி­யால் இவர்­களில் 19.8 மில்­லி­யன் பேர் காப்­பாற்­றப்­பட்­ட­னர் என்று ஆய்வின் முன்னணி ஆசி­ரி­யர் டாக்­டர் ஓலி­வர் வாட்­சன் குறிப்­பிட்­டார்.

ஏறக்­கு­றைய 185 நாடு­கள், வட்­டா­ரங்­களில் நிகழ்ந்த அதி­க­மான இறப்­பு­க­ளின் அடிப்­ப­டை­யில் மதிப்­பீ­டு­கள் செய்­யப்­பட்­டன.

அதிக மக்­கள் தொகை, கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக சீனா இந்த ஆய்­வில் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இது, ஆய்­வின் பொதுவான கண்டுபிடிப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

தொற்­று­நோய் இல்­லா­மல் ஒரு வரு­டத்­தில் பொது­வாக நிக­ழும் மர­ணங்­க­ளை­விட கூடு­தல் இறப்­பு­கள் நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ கிரு­மித்தொற்­றால் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

பல குறைந்த வரு­மா­னம் கொண்ட நாடு­களில் தடுப்­பூசி இலக்­கு­களை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட முதல் ஆண்­டில் எட்ட முடி­யா­த­தால் ஆயி­ரக்கணக்­கானவர்கள் இறந்தனர்.

உல­க­ளா­விய கோவேக்ஸ் தடுப்­பூசி பகிர்வு திட்­டத்­தில் நிர்­ண­யிக்­கப்­பட்ட தடுப்­பூசி இலக்­கான 20 விழுக்­காட்டை அந்த கால­கட்­டத்­தில் நாடுகள் அடைய முடிந்­தி­ருந்­தால் கூடு­த­லாக 156,900 இறப்­பு­கள் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

மேலும் உலக சுகா­தார நிறு வனத்­தின் 2021 கொவிட்-19 தடுப்­பூசி இலக்­கில் 40 விழுக்­காட்டை ஒவ்­வொரு நாடும் எட்­டி­யி­ருந்­தால் மேலும் 599,300 மர­ணங்­கள் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று ஆய்வு மதிப்­பிட்­டுள்­ளது.