துப்பாக்கிப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்

துப்பாக்கிப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல்

1 mins read
b5a9c468-a922-4b68-a33a-f7671fbd538c
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க செனட் சபை­யில் துப்­பாக்­கி­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­களை விதிக்­கும் மசோதா நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து இவ்­வார இறு­தி­யில் இந்த மசோதா மீது இறு­திக்­கட்ட வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும்.

தற்­காப்­புக்­காக கைத்­துப்­பாக்­கியை வைத்­தி­ருப்­பது அமெ­ரிக்­கர்­க­ளின் உரிமை என்று வழக்கு ஒன்­றில் உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்­துள்ள நிலை­யில் துப்­பாக்­கிப் பாது­காப்பு மசோ­தா­வுக்கு செனட் சபை ஒப்­பு­தல் அளித்து உள்­ளது.

உச்ச நீதி­மன்­றத்­தின் வர­லாற்­றுச் சிறப்­பு­வாய்ந்த தீர்ப்­பும், துப்­பாக்­கிப் பாது­காப்­புக்கு செனட் சபை எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­யும் ஆயு­தம் தொடர்­பான விவ­கா­ரத்­தில் நாட்டை பிள­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறது. கடந்த சில மாதங்­க­ளாக உவால்டே, டெக்­சஸ், பஃப்ளோ, நியூ­யார்க் ஆகிய இடங்­களில் நடந்த துப்­பாக்­கிச்­சூட்­டில் 30க்கும் மேற்­பட்­டோர் கொல்­லப்­பட்­ட­னர். அவர்­களில் 19 குழந்­தை­களும் அடங்குவர்.

செனட் சபை­யில் மசோ­தா­வுக்கு ஆத­ர­வாக 65 வாக்­கு­களும் எதி­ராக 33 வாக்­கு­களும் பதி வாகின. ஆளும் ஜன­நா­ய­கக் கட்சி எம்.பி.க்கள் மற்­றும் சில குடி­ய­ர­சுக் கட்சி எம்.பி.க்கள் ஆத­ர­வு­ட­னும் செனட் சபை­யில் மசோதா நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­கர்­க­ளை­யும் பள்ளி மற்­றும் சமூ­கத்­தில் உள்ள குழந்­தை­க­ளை­யும் பாது­காக்க இந்த மசோதா உத­வும் என்று வாக் களிப்­புக்­குப் பிறகு பேசிய அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் தெரி­வித்­தார். அமெரிக்காவில் தனி நபா்கள் சக்திவாய்ந்த துப்பாக்கி களை வைத்திருப்பதற்கு அந் நாட்டு அரசமைப்புச் சட்டம் அனுமதியளிக்கிறது.